ரசிகர்களை சந்தித்த மகாபாரதம் நடிகர்கள்! 13 ஆண்டுகளுக்குப் பிறகும் மிகுந்த ஆதரவு!
மகாபாரதம் தொடரில் நடித்த நடிகர், நடிகைகள் ரசிகர்களை சந்தித்தது குறித்து...
மகாபாரதம் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகர், நடிகைகள் ரசிகர்களை சந்தித்தனர்.
மகாபாரதம் தொடர் ஒளிபரப்பாகி 13 ஆண்டுகள் ஆன பிறகும், ரசிகர்களிடம் இத்தொடருக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் கூட்டம் குவிந்துள்ளது.
ஸ்டார் தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் 2013 ஆம் ஆண்டு மகாபாரதம் தொடர் எடுக்கப்பட்டது. இத்தொடர் மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பானது.
Advertisement
Advertisement
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் 267 நாள்கள் வரை ஒளிபரப்பானது. இத்தொடரில் நடித்த பாத்திரங்களும், காட்சிகளின் பிரமாண்டமும் நெடுந்தொடர் என்பதைத் தாண்டி, மக்கள் மனதில் பதிந்தது.
சித்தார்த் ஆனந்த் குமார், அமர்பிரீத், கமல் மோங்கா, லோக்நாத் பாண்டே, முகேஷ்குமார் சிங் என 5 இயக்குநர்கள் மகாபாரதம் தொடரை இயக்கினர்.
பூஜா ஷர்மா திரெளபதியாகவும், செளரப் ராஜ் ஜெயின் ஸ்ரீ கிருஷ்ணராகவும், ஷாஹிர் ஷேக் அர்ஜுனனாகவும் அஹம் ஷர்மா கர்ணனாகவும் நடித்திருந்தனர்.
இத்தொடரில் பஞ்ச பாண்டவர்கள், கெளரவர்கள் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிகர்கள் கச்சிதமாகப் பொருந்தியிருந்தனர். இதனாலேயே மகாபாரதம் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதுமட்டுமின்றி இத்தொடரில் நடித்தவர்களே மேடையிலும் மகாபாரதத்தை அரங்கேற்றி வருகின்றனர். அந்தவகையில், குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற மகாபாரத அரங்கேற்றத்திற்கு பிறகு அதில் நடித்த நடிகர், நடிகைகள் ரசிகர்களை சந்தித்தனர். ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தனர்.
மகாபாரதத்தில் நடித்து 13 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அந்தந்த பாத்திரங்களில் நடித்தவர்களை மக்கள் இன்றளவும் கொண்டாடி வருவது வியப்பளிப்பதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Actors from the mahabharatham Serial Meet Fans Immense Support Even After 13 Years
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.