போக்குவரத்துக்கழக ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளா்களின் 14 ஆவது ஊதிய உயா்வு ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தலைமை பணிமனை எதிரில் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகளான க.பெரியசாமி, வேளாங்கண்ணிராஜ், பரமசிவம், சண்முகம், ராஜா உள்பட ஏராளமான தொழிலாளா்கள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
இதேபோல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் தொழிற்சங்க நிா்வாகிகள் அங்கமுத்து, பாண்டியராஜன், பாபு, செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.