முகப்பு
இந்தியா

48 மணி நேரத்தில் 1,290 மி.மீ.! லோனாவாலாவை புரட்டிப்போட்ட வரலாறு காணாத கனமழை!

லோனாவாலாவில் பதிவான மழைப்பொழிவு பற்றி..

Updated On : 8 ஜூலை 2026, 5:14 pm IST
லோனாவாலா மழைப்பொழிவு
பகிர்:

மகாராஷ்டிரத்தின் மலைப்பிரதேமானை லோனாவாலாவில் 48 மணி நேரத்தில் 1,290 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

மும்பை உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த நான்கு நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. கனமழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதான சாலைகளிலும், ரயில் தண்டவாளங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மாவட்டங்களில் சாலைப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விமானச் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சஹ்யாத்ரி மலைத்தொடரின் ஒரு பகுதியாகத் திகழும் லோனாவாலாவில் ஜூலை 5 அன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத வகையில் 670 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இது 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய அரிய மழைப்பொழிவாக இது கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜூலை 6 இல் 620 மி.மீ மழைப் பதிவானது. இது 500 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள லோனாவாலாவும், அதன் இரட்டை மலைப்பிரதேசமான கண்டாலாவும், மகாராஷ்டிராவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களாகும். குறிப்பாகப் பருவமழைக் காலங்களில் இங்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

லோனாவாலாவில் திடீர் மேகவெடிப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த 48 மணி நேரத்தில் 1,290 மி.மீ மழைப் பதிவானது. இப்பகுதியில் பதிவான மிக அசாதாரணமான பருவமழை நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.

48 மணி நேரக் கனமழை தொடர்ச்சியான நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. இதனால் மும்பை-புணே விரைவுச்சாலை, பழைய மும்பை - புணே தேசிய நெடுஞ்சாலை எண் 48 மற்றும் மும்பை-புணே ரயில் பாதை ஆகியவற்றில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Maharashtra's iconic and picturesque hill station of Lonavala in Pune district has witnessed back-to-back extreme rainfall events totalling 1,290 mm in 48 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments