FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

105 ஆண்டுகளுக்கு பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் என்பது வாரம் (கிழமை), திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கொண்டது. இது ஒரு கணித முறை.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 4:05 pm IST
பகிர்:

பஞ்சாங்கம் என்பது வாரம் (கிழமை), திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கொண்டது. இது ஒரு கணித முறை. இதிலும் முனிவர்களின் சூத்திரங்களின் அடிப்படையில் வாக்கியப் பஞ்சாங்கம் என்றும், நவீன வானியல் கணக்குகளை அடிப்படையாகக் கொண்ட திருக்கணிதப் பஞ்சாங்கம் எனவும் இரண்டு கணிப்பு முறைகள் உள்ளன.

இந்த ஜோதிடக் கணிப்பு முறைகளை எளிமைப்படுத்தும் விதமாக, 1926-ஆம் ஆண்டு முதல் 2030-ஆம் ஆண்டு வரையிலான 105 ஆண்டுகளின் பஞ்சாங்கத்தை - வாக்கியம், திருக்கணிதம் என இரண்டு பிரிவிலும் தனித்தனியாக - 6 பாகங்களைக் கொண்ட புத்தகமாக அச்சிட்டுள்ளது சென்னை தியாகராய நகரில் உள்ள மணிமேகலைப் பிரசுரம். இது ஜோதிடக் கலை தொடர்பான அனைவருக்கும் ஒரு ரெடிரெக்கானர்.

ஒவ்வொரு தொகுதியும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான பஞ்சாங்கக் கணக்குகள், கிரக நிலைகள், ஜாதகக் கணித அட்டவணைகள் மற்றும் முகூர்த்தத் தகவல்களை ஒருங்கிணைத்து வழங்குகின்றன. பழைய ஆண்டுகளின் கிரக நிலைகளை ஆய்வு செய்ய விரும்பும் ஆராய்ச்சியாளர்கள், ஜாதகக் கணிதம் பயிலும் மாணவர்கள், தொழில்முறை ஜோதிடர்கள், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் ஆன்மிக ஆர்வலர்கள் என அனைவருக்கும் இந்த நூல்கள் சிறந்த வழிகாட்டியாகும்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments