FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராஜஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: ஜலாவாரில் 300 மி.மீ மழை!

ராஜஸ்தானில் கனமழை பற்றி..

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 5:04 pm IST
கனமழை
பகிர்:

ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஜலாவார் மாவட்டத்தின் சுனேல் பகுதியில் 300 மி.மீ மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை மேலும் தீவிரமடையக்கூடும் என வானிலை எச்சரித்துள்ளது.

ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி,

Advertisement

Advertisement

வடமேற்கு மத்தியப் பிரதேசத்தின் மீது குறைந்த காற்றழுத்தப் பகுதி நீடிக்கின்றது. இதன் தாக்கத்தால், ஜலாவாரில் மிகக் கனமழையும், பூந்தி மற்றும் கோட்டா மாவட்டங்களில் கனமழையும் பதிவாகின. பன்ஸ்வாரா மற்றும் தித்வானா மாவட்டங்களின் சில இடங்களிலும் கனமழை பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் ஜலாவார் பகுதியில் உள்ள சுனேல் பகுதியில் அதிகபட்சமாக 300 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது.

இன்று, கோட்டா, உதய்பூர், அஜ்மீர் மற்றும் ஜெய்ப்பூர் மண்டலங்களின் சில பகுதிகளில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழை அல்லது மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேவேளையில் பரத்பூர், பிகானேர் மற்றும் ஜோத்பூர் மண்டலங்களின் சில பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 12ல் ஜெய்ப்பூர், பரத்பூர், அஜ்மீர், கோட்டா, உதய்பூர், ஜோத்பூர் மற்றும் பிகானேர் மண்டலங்களின் சில பகுதிகளில் மிதமான மழையுடன் ஆங்காங்கே கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒருசில இடங்களில் மிகக் கனமழையும் பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 13 முதல் மழைப்பொழிவு குறையக்கூடும் என்றும், அப்போது சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கிழக்கு ராஜஸ்தானில் ஆங்காங்கே கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments