தில்லியில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
தில்லியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதையடுத்து, வானிலை ஆய்வு மையம் மாலை 5 மணி வரை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தில்லியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதையடுத்து, வானிலை ஆய்வு மையம் மாலை 5 மணி வரை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
செப். 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தலைநகா் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நாடாளுமன்றத் தெரு, பாரத் மண்டபம் உள்ளிட்ட மத்திய மற்றும் வடக்கு தில்லியின் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) பிற்பகல் 1 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில், தில்லியின் பல பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்தது. மணிக்கு 15 மி.மீ. வரை மழைப்பொழிவு இருக்கும் என்றும், சில பகுதிகளில் மணிக்கு 15 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த முன்னறிவிப்பின் அடிப்படையில், மாவட்ட அளவிலான உடனடி வானிலை முன்னறிவிப்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக தில்லியில் இயல்பைவிட அதிகபட்ச வெப்பநிலை பதிவான நிலையில், தற்போது மழை பெய்துள்ளது. மாலை நேரத்திலும் தில்லியின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 2 நாள்களுக்கு தலைநகரில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.