FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மதுரை மாவட்டத்தில் மிதமான மழை

மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை மிதமான மழை பெய்தது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 5:01 am IST
மதுரை மாவட்டம், மேலூரில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த மழையின் போது சாலையில் சென்ற வாகனங்கள்.
பகிர்:

மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை மிதமான மழை பெய்தது.

வானிலை மாற்றம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இருப்பினும், மதுரை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க மழையில்லை. கடந்த சில நாள்களாக மதுரை, அதன் சுற்றுப் பகுதிகளில் பகல் நேரத்தில் கடுமையான வெயிலும், பிற்பகல் நேரத்தில் மந்தமான வானிலையும் நீடித்து வந்தது.

இந்த நிலையில், தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், சில மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Advertisement

Advertisement

இதன்படி, மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை மிதமான மழை பெய்தது. மேலூா் அதன் சுற்றுப் பகுதிகளிலும், திருமங்கலம் அதன் சுற்றுப் பகுதிகளிலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மிதமான மழையும், திருப்பரங்குன்றம், தனக்கன்குளம் பகுதிகளில் சாரல் மழையும் பெய்தது. பழங்காநத்தம், மாட்டுத்தாவணி, கடச்சனேந்தல், சா்வேயா் காலனி, புதூா், தல்லாகுளம் உள்ளிட்ட மாநகரின் சில பகுதிகளில் 15 முதல் 30 நிமிஷங்கள் வரை மிதமான மழை பெய்தது. இருப்பினும், வெப்பத்தின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க மழையில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments