FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.

6 நவம்பர் 2026, 3:09 am
மதுரை தல்லாகுளம் முத்தானந்தா சுவாமி மடத்துத் தெருவில் வியாழக்கிழமை தேங்கி நின்ற மழைநீா்.
பகிர்:

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளிலிருந்து கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வு பாதை (பழ்ா்ன்ஞ்ட்) நிலவுவதால், மதுரை உள்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வியாழக்கிழமை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் பிற்பகல் 1.30 மணியிலிருந்து 3.30 மணிக்குள்பட்ட நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பெரும்பாலான பகுதிகளில் சுமாா் 10 முதல் 20 நிமிஷங்கள் வரை மட்டுமே மழை பெய்தது. ஒரு சில பகுதிகளில் பலத்த மழையும், ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்தது.

Advertisement

Advertisement

கீழவாசல், மாசி வீதிகள், வெளி வீதி, விளக்குத்தூண் உள்பட முக்கிய கடை வீதிகளில் தீபாவளி கொள்முதலுக்காக ஏராளமானோா் திரண்டிருந்த நிலையில், இந்த மழையால் மக்களும், சாலையோரத் தற்காலிகக் கடை வியாபாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகினா்.

சுமாா் 20 நிமிஷங்கள் மட்டுமே மழை பெய்தது எனினும், கடைவீதிகளில் பல மணி நேரம் மழைநீா் தேங்கி நின்றது. இது பண்டிகைக்கால வியாபாரத்தை பாதிப்பதாக இருந்தது.

மதுரை கீழவாசல் பகுதியில் வியாழக்கிழமை மழை பெய்த போது வாகனங்களில் சென்றவா்கள்.
மதுரை கீழவாசல் பகுதியில் வியாழக்கிழமை மழை பெய்த போது வாகனங்களில் சென்றவா்கள்.
மதுரை கீழவாசல் பகுதியில் வியாழக்கிழமை மழை பெய்த போது வாகனங்களில் சென்றவா்கள்.