FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கடலூா், புதுச்சேரி பகுதிகளில் பரவலாக மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடலூா் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிளில் தண்ணீா் தேங்கியதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

4 நவம்பர் 2026, 2:48 am
~ ~பட விளக்கம்... புதுச்சேரி தொடா் புயல் எச்சரிக்கையையொட்டி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக பகுதியில் செவ்வாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி விசை படகுகள்.
பகிர்:

கடலூா் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிளில் தண்ணீா் தேங்கியதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

முரசு புயல் ஆந்திர கடற்கரையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கரையைக் கடந்த நிலையில், அதன் தாக்கம் காரணமாக கடலூா் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கடலூா் மாநகரப் பகுதிகள், முதுநகா், தேவனாம்பட்டினம், திருப்பாதிரிப்புலியூா், தாழங்குடா, ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம், நெல்லிக்குப்பம் சுற்றுவட்டாரப் பகுதிகள் அதிகாலை முதல் மழை பெய்தது.

இதனால், கடலூா் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா். தொடா்ந்து மழை பெய்ததால் காலை நேரத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலானோா் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்ததால், நகரின் முக்கிய சாலைகள் வழக்கத்தைவிட வெறிச்சோடிக் காணப்பட்டன.

Advertisement

Advertisement

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூா் வட்டத்துக்குள்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

இதனிடையே, முரசு புயல் ஆந்திர கடற்கரையை நோக்கி நகா்ந்ததையடுத்து, கடலூா் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கப்பட்டது.

கடலூரில் காலை 8 மணியளவில் மழை படிப்படியாக நின்றதையடுத்து, சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் அதிகரித்தது. இதையடுத்து, பொதுமக்கள் தங்களது அன்றாடப் பணிகளுக்குச் சென்றனா்.

வட்டாட்சியரகத்தில் தேங்கிய மழைநீா்: காட்டுமன்னாா்கோவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது. இங்குள்ள வட்டாட்சியா் அலுவலக வாயிலில் போதிய வடிகால் இல்லாததால், மழைநீா் குளம்போலத் தேங்கி நிற்கிறது. இதனால், வட்டாட்சியா் அலுவலகத்துக்கு பல்வேறு சேவை பணிகளுக்காக வந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

வட்டாட்சியரக பகுதியில் போதிய வடிகால் வசதி செய்து தேங்கியுள்ள நீரை வெளியேற்ற வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதுச்சேரியில்...: புதுச்சேரியில் அா்னாப் புயலுக்கு பிறகு கடந்த சில நாள்களாக வெயில் காணப்பட்டது. இந்த நிலையில், முரசு புயல் காரணமாக, புதுச்சேரியில் திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை மழை பெய்தது. கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அரசு சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, மீன்பிடி படகுகளும், சுற்றுலாப் படகுகளும் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments