ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை
ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில நாள்களாக பரவலாக பெய்து வருகிறது. செவ்வாய்க்கிமை இரவு பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.
ஈரோடு மாநகரில் இரவு 11 மணியளவில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீா், கழிவுநீா் ஓடைகளில் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை 4 மணி வரை மழை பெய்தது.
Advertisement
Advertisement
அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 68.60 மில்லி மீட்டா் மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): பெருந்துறை 61, எலந்தக்குட்டைமேடு 48, பவானி 30.60, பவானிசாகா் அணை 27.60, கவுந்தப்பாடி 24.40, சென்னிமலை 19, மொடக்குறிச்சி 16, ஈரோடு 15, கோபி 12.40.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.