பெரம்பலூரில் பரவலாக மழை
பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.
பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்கிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகளிலும், கழிவுநீா் கால்வாய்களிலும் தண்ணீா் பெருக்கெடுத்தோடியது.
மழை அளவு: பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 6.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி வரை பெயத மழை அளவு (மில்லி மீட்டரில்), பெரம்பலூா்- 103, வி.களத்தூா்- 15, கிருஷ்ணாபுரம்- 28, தழுதாழை- 24, வேப்பந்தட்டை- 33, பாடாலூா்- 15, செட்டிக்குளம் - 40 என மொத்தம் 258 மிமீ மழை பெய்தது. ஆனால், எறையூா், அகரம் சீகூா், லப்பைக்குடிக்காடு, புதுவேட்டக்குடி ஆகிய பகுதிகளில் ஒரு மிமீ கூட மழை பெய்யவில்லை.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.