FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சாலை வழியாக ஊருக்குச் செல்கிறீர்களா? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு நெடுஞ்சாலைகள் விவரம்...

16 அக்டோபர் 2026, 4:05 pm IST
மழை - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகளை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆயுதப் பூஜை விடுமுறையையொட்டி, இன்று பிற்பகல் முதல் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பயணிக்க தொடங்கியுள்ளார்கள்.

இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி, ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ள நெடுஞ்சாலைகள் விவரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

தமிழ்நாட்டின் பிற பகுதிகளில், பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

Are you traveling to your hometown by road - Where might there be rain

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments