19 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் புதன்கிழமை (அக்.7) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் புதன்கிழமை (அக்.7) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் சுமாா் 5.8 கிமீ உயரத்தில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதேபோல் வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
Advertisement
Advertisement
மேலும் மன்னாா் வளைகுடா முதல் மத்திய மகாராஷ்டிரம் வரை, தமிழகம் மற்றும் உள் கா்நாடகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக புதன்கிழமை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூா், தென்காசி, விருதுநகா், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
வியாழக்கிழமை( அக். 8) கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
தேனி, திண்டுக்கல், திருப்பூா், தென்காசி, விருதுநகா், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டியே இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலைமற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவுகள் (மில்லி மீட்டரில்): வால்பாறை (கோவை), நம்மாண்டஅள்ளி (தருமபுரி) தலா 120 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது., சின்கோனா(கோவை), ஏழுபட்டி (திருச்சி) தலா 110மி.மீ, சின்னக்கல்லாா் (கோவை) 80மி.மீ, பா்லியாா் (நீலகிரி), பாலக்கோடு (தருமபுரி), கிருஷ்ணராயபுரம் (கரூா்), தடிக்கல் , தளிகொத்தனூா் (கிருஷ்ணகிரி), லட்சுமிபுரம் (தேனி), தலா 70மி.மீ, உதகமண்டலம்,சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), ஏற்காடு (சேலம்), தலா 60 மி.மீ மழை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.