மகாதீபம் நாளில் திருவண்ணாமலை உள்பட 18 மாவட்டங்களில் கனமழை!
கனமழை எச்சரிக்கை பற்றி...
மகா தீபத் திருநாளன்று திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆக்வான் புயல் நவ. 20-ல் மாலை ஒடிசா அருகே கரையைக் கடக்க உள்ளது. இதனால், தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை வெளியிட்ட அறிக்கையில்,
Advertisement
Advertisement
நவ. 24-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாயப்புள்ளது.
ஏமாற்றம் தந்த மூன்று புயல்கள்
வங்கக் கடலில் உருவாகிய அர்னாப், முரசு ஆகிய இரண்டு புயல்களும் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்தது. இதனால், அங்கு பெரும் பாதிப்பை சந்தித்தது. ஆனால், தமிழ்நாட்டில் பெரியளவில் மழை பெய்யவில்லை.
மூன்றாவது புயலாக வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆக்வான் புயல் ஒடிசாவில் நவ. 20 (இன்று) மாலை கரையைக் கடக்கிறது. இந்தப் புயலாலும் தமிழ்நாட்டுக்கு பெய்யவேண்டிய மழை பொய்த்தது.
அடுத்த வரும் புயலாவது தமிழ்நாட்டுக்கு சாதகமாக அமையுமா என்று மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.