FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னைக்கு நாளை விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை வாபஸ்!

நவ. 18-ல் சென்னைக்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக..

ஆரஞ்சு எச்சரிக்கை - file photo
பகிர்:

சென்னைக்கு நவ. 18-ஆம் தேதி விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்றுள்ள நிலையில், நவம்பர் 16 மாலை அக்வான் புயலாக உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

இதன் காரணமாக, நவ. 18, 19 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த எச்சரிக்கையை தற்போது திரும்பப் பெற்றுள்ளது.

நவம்பர் 18-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் உள்பட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 19ல் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.