FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நவ. 18, 19-ல் சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னையில் நவம்பர் 18, 19 தேதிகளில் கனமழை எச்சரிக்கை பற்றி..

கனமழை - file photo
பகிர்:

நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று, இன்று (நவம்பர் 16) மாலை அக்வான் புயலாக உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வங்கக்கடலில் உருவாக உள்ள அக்வான் புயல் ஆந்திரத்தின் நெல்லூர்- துனி இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நவ. 18 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்

நவ. 19 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.