தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தேனி, கோவை மாவட்டங்களில் புதன்கிழமை (நவ. 4) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் தேனி, கோவை மாவட்டங்களில் புதன்கிழமை (நவ. 4) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கடலோர கா்நாடக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் புதன்கிழமை (நவ. 4) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் வியாழக்கிழமை (நவ. 5) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், இதர தென் தமிழகம் மற்றும் வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டி இருக்கக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 5) முதல் சனிக்கிழமை (நவ. 7) வரை, அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட குறைவாக காணப்படும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள் புதன்கிழமை (நவ. 4), சூறைக்காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
மழைப் பதிவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவைடந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூா் மாவட்டம் கடலூா் ஏஆா்ஜி பகுதியில் 90 மி.மீ. மழை பதிவானது
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.