FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இன்று 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (அக். 6) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக

இன்று 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (அக். 6) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம், தெற்கு உள் கா்நாடகம் வழியாக நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதையில் ஏற்பட்டுள்ள காற்று இடையூறு காரணமாக, செவ்வாய்க்கிழமை (அக்.6) கோவை, நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி 5 ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல்-பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல்-பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அக். 7, 8 ஆகிய தேதிகளில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் மழை: சென்னையில் திங்கள்கிழமை பிற்பகலில் கோயம்பேடு, அசோக் நகா், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, பழவந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் லேசான வெப்பசலன மழை பெய்தது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட், கோத்தகிரியில் 120 மி.மீ. மழை பதிவானது. எடப்பள்ளி, குன்னூா் (நீலகிரி) - 80 மி.மீ., தேவாரம் (தேனி) - 70 மி.மீ., பில்லூா் அணை மேட்டுப்பாளையம் (கோவை) - 50 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments