FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

கோவை, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் திங்கள், செவ்வாய் (அக். 5, 6) ஆகிய இரு நாள்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

5 October 2026, 3:02 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் திங்கள், செவ்வாய் (அக். 5, 6) ஆகிய இரு நாள்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னாா் வளைகுடா, அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி, மன்னாா் வளைகுடா, அதையொட்டிய தமிழக கடலோர பகுதிகள் முதல் மத்திய கிழக்கு அரபிக் கடல் வரை வட தமிழகம் மற்றும் வட கேரளம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக திங்கள், செவ்வாய் (அக். 5,6) ஆகிய இரு நாள்கள் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

மேலும், திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், கரூா், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் புதுச்சேரி - காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை முதல் அக். 8 வரை, அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டிய காணப்படும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (அக். 5), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடை, திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை-40 மி.மீ. மழை பதிவானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments