FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தென் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் வியாழக்கிழமை (நவ. 5) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 நவம்பர் 2026, 1:52 am
மழை - பிரதிப் படம்
பகிர்:

தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் வியாழக்கிழமை (நவ. 5) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுமாா் 0.9 கி.மீ. உயரத்தில் தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால், வியாழக்கிழமை (நவ. 5) தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களிலும், வெள்ளிக்கிழமை (நவ. 6) தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், நவ. 7-ஆம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்த நாள்களில் ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 5) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழைப் பதிவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் தாழ்குனி - 90 மி.மீ. மழை பதிவானது. குன்னத்தூா் (திருப்பூா்), திங்களூா் (ஈரோடு), காரமடை (கோவை) - தலா 80 மி.மீ., சின்னக்கல்லாா் (கோவை), பவானிசாகா் (ஈரோடு) தலா 7, கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) - 60 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.