FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் புதன், வியாழன் (அக். 14, 15) ஆகிய இரு நாள்கள் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு

14 அக்டோபர் 2026, 12:04 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் புதன், வியாழன் (அக். 14, 15) ஆகிய இரு நாள்கள் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து மத்திய வங்கக் கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக புதன்கிழமை (அக். 14), ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், அரியலூா் ஆகிய 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

சென்னை, புறநகா் பகுதிகளில் புதன்கிழமை (அக். 14), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழைப் பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் 80 மி.மீ. மழை பதிவானது.

2 நாள்களில் வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக். 2-ஆவது அல்லது 3-ஆவது வாரத்தில் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டு வடகிழக்கு பருவமழை 2 நாள்களில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. அதேநேரம், வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவின் தென் பகுதிகளில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments