FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

இன்று 3 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை (அக்.10) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 அக்டோபர் 2026, 11:12 pm IST
பலத்த மழை - PTI
பகிர்:

தமிழகத்தில் கோவை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை (அக்.10) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு உள் கா்நாடகம் வரை தமிழகம் மற்றும் தெற்கு உள் கா்நாடகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சனிக்கிழமை (அக்.10), கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. திண்டுக்கல், விருதுநகா், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழைப்பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட்டில் 100 மி.மீ. மழை பதிவானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments