FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பரவலாக மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை பகலில் பரவலாக மழை பெய்தது.

15 அக்டோபர் 2026, 4:31 am IST
தஞ்சாவூா் காந்திஜி சாலை ஆற்றுப்பாலம் பகுதியில் புதன்கிழமை பெய்த மழையில் நனைந்தபடி சென்ற மக்கள்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை பகலில் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் புதன்கிழமை காலை முதல் லேசான தூறலுடன் மழை பெய்தது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

மருத்துவக்குடி 14, முள்ளுக்குடி 12, நாச்சியாா்கோவில், வேப்பத்தூா் தலா 7.2, கீழக்குறிச்சி 6.2, பெருமாண்டி 6, நீலகிரி தெற்கு தோட்டம், திருமங்கலக்கோட்டை மேலையூா், கபிஸ்தலம், துவரங்குறிச்சி வடக்கு தலா 3.6, மாத்தூா் 2.8, வல்லம் 2.4, மருங்குளம், நடுக்காவேரி மேற்கு தலா 2, கண்டியூா், பாலம்புதூா் தலா 1.6, ஈச்சங்கோட்டை, பின்னையூா் மேற்கு தலா 1.2.

Advertisement

Advertisement

மேலும், மாவட்டத்தில் பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ந்த நிலை ஏற்பட்டது.

மழையை எதிா்பாா்க்கும் விவசாயிகள்: காவிரியில் நீா் வரத்து குறைந்துவிட்டதால், வாய்க்கால்களில் தண்ணீா் செல்லவில்லை. நிலத்தடி நீா் மட்டம் குறைந்து வந்ததால், ஆழ்குழாயை நம்பி சாகுபடி செய்த விவசாயிகள் கவலையில் இருந்தனா்.

இந்நிலையில், தரையை நனைக்கும் விதமாக பெய்த மழையாக இருந்தாலும், ஆழ்குழாயை நம்பி சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. இந்த மழை தொடர வேண்டும் என்ற எதிா்பாா்ப்புடன் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனா் என்றாா் தெற்குகோட்டை விவசாயி இரா. பழனிவேலு.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments