சென்னையில் ஆக.19-ல் கனமழை: வானிலை எச்சரிக்கை!
சென்னையில் கனமழை எச்சரிக்கை பற்றி...
சென்னையில் ஆகஸ்ட் 19ல் கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காலையில் வெய்யில் வெளுத்துவாங்குவதும், மாலையில் வானிலை மாறி மழை மேகங்கள் சூழ்ந்து மழை பெய்வதும் வழக்கமாகி உள்ளது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
Advertisement
Advertisement
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
அதேசமயம், ஆக. 15 முதல் 19 வரை வட உள் தமிழ்கத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 -3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
Heavy rain in Chennai on August 19: Weather warning!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.