சென்னையில் வெளுத்து வாங்கும் மழை!
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருவது பற்றி...
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னை அம்பத்தூர், தாம்பரம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், எல்ஐசி, பாரிமுனை, மயிலாப்பூர், எழும்பூர் உள்ளிட்ட சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று காலை வழக்கம் போலவே வெய்யில் வாட்டி வதைத்தது. ஆனால் மாலையில் சென்னையில் ஒவ்வொரு பகுதியாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
பலத்த இடியைத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த சில நாள்களாவே வெய்யில் வாட்டி வதைத்த நிலையில் இன்று மழை பெய்து வருவது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் திடீர் மழையால், அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Heavy rain in various places in chennai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.