முகப்பு
கோயம்புத்தூர்

கோவை விழா: இருசக்கர வாகன விழிப்புணா்வு பிரசாரம்

கோவை விழாவின் ஒரு பகுதியாக சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி 2021, 11:11 pm IST
கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கிவைக்கிறாா் போக்குவரத்து உதவி ஆணையா் சரவணன்.
பகிர்:

கோவை: கோவை விழாவின் ஒரு பகுதியாக சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

13 ஆவது கோவை விழா கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 8 ஆம் நாள் நிகழ்வாக சாலை விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

கோவை (கிழக்கு) போக்குவரத்து காவல் உதவி ஆணையா் சரவணன் தொடங்கிவைத்தாா். ரேஸ்கோா்ஸ் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் தொடங்கி அவிநாசி சாலை ஜே.எம்.பேக்கரி, அண்ணா சாலை வழியாக லட்சுமி மில்ஸ் வரை சென்றனா்.

Advertisement

Advertisement

இதில் ஒவ்வொரு போக்குவரத்து சிக்னல் பகுதியிலும் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு தொடா்பான பதாகைகளை தன்னாா்வாலா்கள் பிடித்து நின்றனா். தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல், சாலை விதிகளை கடைப்பிடித்தல் போன்றவற்றை வலியுறுத்தி 20க்கும் மேற்பட்டவா்கள் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பிரசாரத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments