கனடாவை வீழ்த்தி முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது மொராக்கோ!
கால்பந்து உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறிய மொராக்கோ அணி குறித்து...
கால்பந்து உலகக் கோப்பையில் மொராக்கோ அணி கனடாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.
கடந்த உலகக் கோப்பையில் மொராகோ அணி அரையிறுதி வரைக்கும் சென்றது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்க நாடான மொராகோ கால்பந்து உலகில் தனக்கென்று தனியான அந்தஸ்தை உருவாக்கி வருகிறது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் திடலில் நடைபெற்ற போட்டியில் அசெடின் ஒனாஹி 50, 82ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார். சுபியான் ரஹிமி 90+8ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 3-0 என மொராக்கோவை வெற்றிபெற செய்தார்கள்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் 50 சதவிகித பந்தை மொராக்கோவும் 37 சதவிகிதத்தை கனடாவும் இரு அணிகளுக்கும் இடையே மிகுந்த போட்டியாகவும் இருந்தது.
கனடா அணி இலக்கை நோக்கி அடித்த 5 கோல்களையும் மொராக்கோ கோல்கீப்பர் தடுத்து அசத்தினார். இரு அணி வீரர்களுக்கும் தலா 4 ’யெல்லோ கார்டு’கள் அளிக்கப்பட்டன.
மொராக்கோ அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த அணி காலிறுதியில் பராகுவே - பிரான்ஸ் இதில் வெல்லும் அணியுடன் மோதவிருக்கிறது.
இஸ்மாயில் சைபாரி காயம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து 22ஆவது நிமிஷம் வெளியேறினார்.
Morocco beats World Cup co-host Canada 3-0 and advances to the quarterfinals
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.