மொராக்கோவின் முதல் பெண் பிரதமர் நியமனம்! அரபு உலகின் 2 ஆவது பெண் தலைவர்!
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸ்ஸஹ்ரா எல் மன்சூரி நியமனம்...
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸ்ஸஹ்ரா எல் மன்சூரியை அந்நாட்டு மன்னர் ஆறாம் முகமது நியமித்துள்ளார்.
மொராக்கோவின் புதிய பிரதமராக 50 வயதான ஃபாத்திமா எஸ்ஸஹ்ரா எல் மன்சூரியை அந்நாட்டு மன்னர் முகமது செவ்வாய்க்கிழமை (செப். 29) அன்று நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், இஸ்லாமிய நாடான மொராக்கோவின் முதல் பெண் பிரதமர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மொராக்கோவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மன்சூரியின் கட்சி பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்ற நிலையில், அவர் புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
மேலும், அந்நாட்டின் தேர்தல் முறையின் மூலம் ஒரே கட்சியால் தனிப் பெரும்பான்மையைப் பெறுவது கடினம் என்பதால் வரும் நாள்களில் மன்சூரி கூட்டணி அரசு அமைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இத்துடன், பிரதமர் மன்சூரி தலைமையிலான அரசின் கீழ் வரும் 2030 ஆம் ஆண்டின் ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடர்பாக பல கோடிக்கணக்கான டாலர் முதலீடுகளைச் செய்யப்படுவதுடன், விலைவாசி, ஊதிய உயர்வு மற்றும் வேலையின்மை உள்ளிட்ட விவகாரங்களில் பல்வேறு முக்கிய திட்டங்கள் உருவாக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, துனிசியாவின் முன்னாள் பிரதமர் நஜ்லா பூடனுக்குப் பிறகு அரபு உலகின் 2 ஆவது பெண் பிரதமராக உருவெடுத்துள்ள மொராக்கோவின் மன்சூரி, மராகேஷ் நகரத்தின் மேயராகப் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
King Mohammed VI of Morocco has appointed Fatima Ezzahra El Mansouri as the country's first female Prime Minister.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.