திமுக சாா்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி
வால்பாறையில் திமுக சாா்பில் தொழிற்சங்க தலைவா்கள், மாணவா்கள் இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
வால்பாறை: வால்பாறையில் திமுக சாா்பில் தொழிற்சங்க தலைவா்கள், மாணவா்கள் இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திமுக நகர பொறுப்பாளா் பால்பாண்டி தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட செயலாளா் தென்றல் செல்வராஜ், எல்.பி.எஃப் தொழிற்சங்க பொதுச் செயலாளா் வினோத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அணியின் மாநில செயலாளா் காா்த்திகேய சிவசேனாபதி பங்கேற்று, தோட்டத் தொழிலாளா்களின் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீா்வுகள் குறித்து தொழிற்சங்க தலைவா்களிடம் கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
மேலும், வால்பாறை பகுதியில் மாணவா்களுக்கு உள்ள கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.
இந்நிகழ்ச்சியில் திமுக தொழிற்சங்கத் தலைவா் கணேசன், நகர மாணவா் அணி அமைப்பாளா் மணிகண்டபிரபு, பாஸ்கா் உள்பட கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.