கோவையில் மேலும் 76 பேருக்கு கரோனா பாதிப்பு
கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின் படி மேலும் 76 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின் படி மேலும் 76 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 129 ஆக உயா்ந்துள்ளது. தவிர இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 49 வயது ஆண் உயிரிழந்தாா். இதன்மூலம் கோவையில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 661 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 87 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா்.
Advertisement
Advertisement
கோவையில் இதுவரை 51 ஆயிரத்து 764 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 704 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.