இன்ஸ்டா சப்ஸ்கிரப்ஷன் கேலிக்குப் பதிலளித்த நந்திதா ஸ்வேதா..! மன்னிப்பு கோரிய யூடியூபர்!
நடிகை நந்திதா ஸ்வேதாவின் இன்ஸ்டா சப்ஸ்கிரப்ஷன் சர்ச்சை குறித்து...
நடிகை நந்திதா ஸ்வேதா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதியதாக சப்ஸ்கிரப்ஷன் வசதியை தொடங்கியுள்ளார். இதில் பணம் கட்டி உறுப்பினர்களாக இணைபவர்கள், அங்குப் பிரத்யேகமாகப் பதிவிடப்படும் புகைப்படங்கள், ரீல்ஸ்களைப் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவைச் சேர்ந்த நந்திதா ஸ்வேதா அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
நந்திதா ஸ்வேதா தற்போது தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மங்களவாரம் என்ற தெலுங்கு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடைசியாக தமிழில் ரணம் அறம் தவறேல் என்ற படத்தில் நடித்தார்.
Advertisement
Advertisement
தற்போது பென்னி என்ற பான் இந்திய திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் சப்ஸ்கிரப்ஷன் வசதியை துவக்கியுள்ளார். இதில் மாதத்திற்கு ரூ. 390 செலுத்தி உறுப்பினராக இணையலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுவரை (ஜூலை 2), இந்த சப்ஸ்கிரப்ஷனில் 521 பேர் இணைந்துள்ளார்கள்.
இது குறித்து சமூக வலைதளத்தில் யூடியூபர் ஒருவர் விடியோ வெளியிட்டிருந்தார். அதில், “பாவம் அவர் என்ன செய்வார்? ஃபீல்டு அவுட் ஆகிவிட்டதால் சப்ஸ்கிரப்ஷன் தொடங்கிவிட்டார்” எனக் கூறினார்.
இந்த விடியோவுக்கு நடிகை நந்திதா ஸ்வேதா, “எவ்ளோ நல்லா பேசுறீங்க. ஃபீல்ட் அவுட்டா? தம்பி சூப்பர் டா. காமிரா முன்னாடி பேச நல்லாவே வருது. பேசிட்டே இருங்க” எனக் கமெண்ட் செய்திருந்தார். பிறகு இதைப் பேசிய நபர் நடிகைக்கு விடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் பலர் நந்திதா ஸ்வேதாவை கிண்டல் செய்தாலும் அது அவர் விருப்பம் என பலர் ஆதரவுக் குரலும் எழுப்பி வருகிறார்கள்.
Actress Nandita Swetha Blasted in comment to mockery over Insta subscription! YouTuber apologizes!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.