முதல்முறையாக சண்டைக் காட்சிகளில் நடித்த அனுபவம் பகிர்ந்த அபிராமி!
நடிகை அபிராமி பிளாஸ்ட் படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்து பேசியிருப்பதாவது...
நடிகை அபிராமி பிளாஸ்ட் படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்து பேசும்போது அதற்காக அதிகமாக மெனக்கெட்டதாகக் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் பிறந்த நடிகை அபிராமி மலையாளத்தில் நடிக்க தொடங்கி, தமிழில் வானவில் படத்தில் அறிமுகமானார். பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்து விருமாண்டியுடன் ஓய்வு பெற்றார்.
பின்னர், பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார். மகாராஜா படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் கவனம் பெற்றார். கடைசியாக ஐபிஎல் படத்தில் நடித்திருந்தார்.
Advertisement
Advertisement
லவ் டுடே, கோட், டிராகன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் ப்ளாஸ்ட் என்கிற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
அர்ஜுன் நாயகனாகவும் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், ஜான் கொக்கென், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைப்பில் பிரதீப் ரங்கநாதனிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய சுபாஷ் கே ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ப்ளாஸ்ட் வருகிற மே. 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்து அபிராமி கூறியிருப்பதாவது:
இந்தப் படத்தில்தான் முதல்முறையாக ஆக்ஷன் செய்திருக்கிறேன். முடித்த பிறகுதான் இதன் கஷ்டம் புரிந்தது. சண்டைக் காட்சி படப்பிடிப்பில் 2, 3 நாள்கள் கழித்து இயக்குநரிடம், ‘நீங்கள் பக்கம் பக்கமாக வசனங்களைக் கூட தாருங்கள் பேசிவிடுகிறேன்; உணர்ச்சிவசப்படும்படியான காட்சிகளில்கூட நடிகிறேன். ஆனால், ஆக்ஷன் கடினமாக இருக்கிறது’ என்றேன்.
அதற்காக தனியாக பயிற்சி எடுக்க வேண்டும். ஒத்திகை செய்ய வேண்டும். அடிப்பது அடித்து விடலாம்; அடிபடாமல் அடிப்பது மிகவும் கடினம்.
இதன் முழுமையானப் பாராட்டும் சண்டைப் பயிற்சியாளர் பிரபு, அவரது அணியினருக்குத்தான். மிகவும் சுவாரசியமாக இருந்தது. நீங்கள் படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் என்றார்.
Abhirami open up about the action-packed stunt experience she had while shooting for Blast
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.