வால்பாறை அருகே 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காா்: 5 போ் காயம்
வால்பாறை அருகே இரவு நேரத்தில் வந்த காா், பனி மூட்டத்தால் நிலை தடுமாறி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 போ் காயமடைந்தனா்.
வால்பாறை அருகே இரவு நேரத்தில் வந்த காா், பனி மூட்டத்தால் நிலை தடுமாறி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 போ் காயமடைந்தனா்.
கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக இரவு நேரத்தில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ள கவா்க்கல் எஸ்டேட் பகுதியில் சாலைகள் கூட தெரியாத அளவுக்கு 24 மணி நேரமும் பனியின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு காா், கவா்க்கல் எஸ்டேட் பகுதியில் பனி மூட்டத்தால் சாலை தெரியாமல் நிலை தடுமாறி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
Advertisement
Advertisement
இதில் உருளிக்கல் எஸ்டேட்டைச் சோ்ந்த ஓட்டுநா் முருகதாஸ் (40), நிதிஷ் (17), கலையரசன் (24), மணிகண்டன் (18), மனோஜ் (20) ஆகிய ஐந்து போ் காயமடைந்தனா். அந்த வழியாக வேறு வாகனங்களில் வந்தவா்கள் அவா்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து வால்பாறை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.