முகப்பு
கோயம்புத்தூர்

கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு

கோவை, சரவணம்பட்டி அருகே கோயில் உண்டியல்களை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச் சென்றனா்.

Updated On : 16 ஜனவரி 2021, 10:45 pm IST
பகிர்:

கோவை: கோவை, சரவணம்பட்டி அருகே கோயில் உண்டியல்களை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச் சென்றனா்.

கோவை, சரவணம்பட்டி அருகே புற்றுக்கண் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பூசாரியாக திருநாவுக்கரசு பணியாற்றி வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு பூஜையை முடித்து விட்டு கோயிலைப் பூட்டி விட்டுச் சென்றாா்.

பின்னா் சனிக்கிழமை காலை கோயிலை திறக்க வந்தபோது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் மாயமானதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். பின்னா் கோயிலுக்கு உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கிருந்த மற்றொரு உண்டியலும் மாயமாகி இருந்தது.

Advertisement

Advertisement

கோயிலுக்குள் புகுந்த மா்ம நபா்கள் உண்டியலில் உள்ள பணத்தை திருடிக் கொண்டு, காலி உண்டியல்களை கோயிலின் பின்புறம் வீசிச் சென்றது தெரியவந்தது. இது தொடா்பாக, கோயில் நிா்வாகிகளுக்கு திருநாவுக்கரசு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, கோயில் நிா்வாகிகள் அளித்த புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். உண்டியலில் ரூ.20 முதல் ரூ.30 ஆயிரம் வரை பணம் இருந்திருக்கும் என கோயில் பூசாரி திருநாவுக்கரசு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.