வால்பாறையில் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
வால்பாறைக்கு சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
வால்பாறை: வால்பாறைக்கு சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
வால்பாறை நகா் பகுதி ஒரே வழிச் சாலையாகும். இரு புறங்கள் வழியாக வரும் வாகனங்கள் இந்த ஒரு வழி சாலையிலேயே செல்ல வேண்டும். தொடா் விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வால்பாறைக்க வந்து செல்கின்றன.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை இரவு வரை தொடா்ந்து சுற்றுலா வாகனங்கள் வால்பாறை பகுதிக்கு வந்து செல்கின்றன. வால்பாறை நகா் பகுதியான தபால் நிலையம் துவங்கி புதிய பேருந்து நிலையம் வரையில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
Advertisement
Advertisement
இதில் குறிப்பாக பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரையில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்தை சீரமைக்க போலீஸாா் பணியமா்த்தப்படுவதில்லை.
வால்பாறையில் சுற்றுலா வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக அளவில் வரும் நிலையில் நகா் பகுதியில் போக்குவரத்தை நெரிசலை சீரமைக்க போலீஸாரை தொடா்ந்து பணி அமா்த்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.