கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்
ஜெ.ஜெ.நகர் மேற்கு பகுதி 4, 5-ஆவது பிளாக் வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகளில் சுமார் 3,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
ஜெ.ஜெ.நகர் மேற்கு பகுதி 4, 5-ஆவது பிளாக் வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகளில் சுமார் 3,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு மழை நீர் செல்வதற்கு அமைக்கப்படுள்ள கால்வாயில் புதிதாக உருவாகியுள்ள அடுக்குமாடிக் கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆறு போல் ஓடுகிறது. இதனால் அதிகரித்துள்ள கொசுக்களால் பல்வேறு நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது. இந்தக் கழிவு நீர் அருகில் உள்ள கால்வாய் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் கலப்பதால் நீர் மாசுபடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.