கட்டா குஸ்தி - 2 படத்தின் ஹவுஸ் ஹஸ்பண்ட் பாடல் வெளியீடு!
விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி - 2 படத்தின் ஹவுஸ் ஹஸ்பண்ட் பாடல் இன்று வெளியானது.
விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி - 2 படத்தின் மூன்றாவது பாடலான ’ஹவுஸ் ஹஸ்பண்ட்’ இன்று வெளியானது.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி - 2 திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பும் இருக்கிறது.
செல்ல அய்யாவு இயக்கியுள்ள இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஐஷ்வர்யா லட்சுமி நாயகியாகவும், முனீஸ்காந்த், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகமும் நகைச்சுவையுடன் கூடிய எமோஷனல் கதையாக இருக்கும் எனத் தெரிகிறது.
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் மூன்றாவது பாடலான ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ பாடல் இன்று வெளியாகியுள்ளது.
மோகன் ராஜன் எழுதிய இப்பாடலை சத்யன் மஹாலிங்கம் பாடியுள்ளார்.
'House Husband' song from the movie Gatta Kusthi 2 released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.