விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!
இரண்டு வானம் படத்தின் வெளியீடு தொடர்பாக...
விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் அவரை வைத்தே இயக்கிய ‘ராட்சசன்’ திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தார்.
தற்போது, மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ள திரைப்படத்திற்கு, ‘இரண்டு வானம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
வாழ்க்கையில் உண்மையான அன்பு கிடைக்கும்போது, ஒரு மனிதருக்குள் எப்படியெல்லாம் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை மையமாகக் கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது
கொடைக்கானலில் 150 நாள்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்திருந்த நிலையில், வரும் அக். 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இரண்டு வானம் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
It has been reported that the release of Vishnu Vishal's film *Irandu Vaanam* has been postponed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.