FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இரண்டு வானம்: டப்பிங் பணிகளை முடித்த மமிதா பைஜூ, விஷ்ணு விஷால்..! ரிலீஸ் எப்போது?

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இரண்டு வானம் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து...

டப்பிங் பணிகளில் விஷ்ணு விஷால், மமிதா பைஜூ - படங்கள்: எக்ஸ் / சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்
பகிர்:

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இரண்டு வானம் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் அவரை வைத்தே இயக்கிய ‘ராட்சசன்’ திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தார்.

Advertisement

Advertisement

மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி ‘இரண்டு வானம்’ என்ற படத்தின் மூலம் இணைந்துள்ளது. கொடைக்கானலில் 150 நாள்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்தப் படம் கடந்த அக். 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், டப்பிங் பணிகள் முடிவடைந்ததாக தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி ஃபிலிம்ஸ் அறிவித்துள்ளது.

திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் ரிலீஸ் தேதி முடிவிசெய்யப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

நவம்பர் இறுதியில் வெளியாகுமா அல்லது டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலா என்ற ஆவல் எழுந்துள்ளது. கர படத்தைத் தவிர தொடர்ச்சியான வெற்றிகளைக் குவித்துவரும் மமிதா பைஜுக்கு இந்தப் படம் என்ன மாதிரியான வெற்றியைத் தரும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

summary

Irandu Vaanam: Mamitha Baiju and Vishnu Vishal complete dubbing work..! When is the release?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.