நடிப்பு அரக்கிகள் ஆலியா பட், மமிதா பைஜூ..! எஸ்.ஜே. சூர்யா புகழாரம்!
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவின் பேட்டியில் கவனம் பெற்ற நடிகைகள் குறித்து...
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவின் பேட்டியில் தென்னிந்தியாவில் மமிதா பைஜூ, வட இந்தியாவில் ஆலியா பட் ஆகிய நடிகைகள் கவனம் பெற்றுள்ளனர்.
நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். முதல் பாகத்தில் இடம்பெறாத இவர் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குநராக இருந்த எஸ்.ஜே. சூர்யா தற்போது பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக அவர் கில்லர் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் அவரே நாயகனாக நடிக்கிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எஸ்.ஜே. சூர்யாவிடம் தற்போது யார் நன்றாக நடிக்கிறார்கள் எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த எஸ்.ஜே. சூர்யா, “இப்போதைக்கு தென் இந்தியாவில் மமிதா பைஜூவும் வட இந்தியாவில் ஆலியா பட்டும் நன்றாக நடிக்கிறார்கள். நடிப்பு அரக்கிகள் எனும் அளவுக்கு சிறப்பாக நடிக்கிறார்கள்” எனக் கூறினார்.
நடிகர் ரஜினி ஜெயிலர் 2 சூப்பர் ஷோ விழாவில் எஸ்.ஜே. சூர்யாவை நடிப்பு அரக்கன் எனப் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.
மலையாள நடிகை மமிதா பைஜூ இந்தாண்டில் பல வெற்றிப் படங்களை அளித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் பெதலேகம் குடும்ப யூனிட படம் வெளியாகி ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
நடிகை ஆலியா பட் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் லவ் அண்ட் வார் படத்திலும் தும்பாட் 2 படத்திலும் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் ஆல்பா என்ற ஆக்ஷன் படம் வெளியானது.
SJ Suryah picks Mamitha Baiju and Alia Bhatt as powerhouse performers
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.