மணிகண்டனின் மக்கள் காவலன்! புதிய பாடல் வெளியீடு!
நடிகர் மணிகண்டனின் “மக்கள் காவலன்” படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது குறித்து...
நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்துள்ள “மக்கள் காவலன்” திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் மணிகண்டன் காவல் அதிகாரியாக நடித்துள்ள புதிய படம் “மக்கள் காவலன்”. இப்படத்தை, அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகும் இந்தப் படத்தில், நடிகர்கள் வாகை சந்திரசேகர், திவ்யா ஸ்ரீபதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், “மக்கள் காவலன்” படத்தின் “இற இறகாக” எனும் புதிய பாடல் இன்று (நவ. 18) மாலை படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
ஜோதி கண்ணாவின் எழுதிய இந்தப் பாடலை நிவாஸ் கே பிரசன்னா இந்தப் பாடலை பாடியுள்ளார். மேலும், நீலம் புரடக்ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள “மக்கள் காவலன்” படம் வரும் டிச. 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது
ஏற்கெனவே, “மக்கள் காவலன்” படத்தின் இக்னோர் எனும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.