FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மணிகண்டனின் மக்கள் காவலன் பட முதல் பாடல்!

நடிகர் மணிகண்டனின் மக்கள் காவலன் பட முதல் பாடல் வெளியாகியுள்ளது குறித்து...

நடிகர் மணிகண்டனின் மக்கள் காவலன் பட முதல் பாடல் வெளியீடு...
பகிர்:

நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்துள்ள “மக்கள் காவலன்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில், நடிகர் மணிகண்டன் காவல் அதிகாரியாக நடித்துள்ள புதிய படம் “மக்கள் காவலன்”.

Advertisement

Advertisement

நடிகர்கள் வாகை சந்திரசேகர், திவ்யா ஸ்ரீபதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் “மக்கள் காவலன்” படத்தின் “இக்னோர்” எனும் முதல் பாடல் இன்று (நவ. 11) மாலை படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

எம்.கே. பாலாஜியின் பாடல் வரிகளில், பாடகர்கள் நிவாஸ் கே பிரசன்னா, யோகி பி மற்றும் நடிகை அதிதி சங்கர் உள்ளிட்டோர் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.

நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள “மக்கள் காவலன்” படம் வரும் டிச. 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The first song from the film "Makkal Kaavalan," starring actor Manikandan as the lead, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.