ஒன் மோர் டைம்... கிங் முதல் பாடல்!
ஷாருக்கானின் கிங் திரைப்படத்தின் முதல் பாடல்...
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் கிங் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஷாருகான் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கிங் என்கிற ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இக்கூட்டணி பதான் திரைப்படத்தின் மூலம் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால் கிங் திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
ரூ. 350 கோடியில் உருவாகிவரும் இப்படத்தில் நடிகர்கள் தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை இந்தாண்டு டிச. 24 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக கிளிம்ஸ் வெளியிட்டுத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், நடிகர் ஷாருக்கானின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான து மில் ஜாயே பாடலை வெளியிட்டுள்ளனர்.
அனிருத் இசையில் அர்ஜித் சிங், எட் ஷெரின் பாடிய இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பாடல் காட்சிகளில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனின் காதலும் ரசனையாக எடுக்கப்பட்டுள்ளது.
The first song from the film 'King', starring actor Shah Rukh Khan, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.