விபத்து ஏற்பட்டதால் நடிகர் சங்கம் பொதுகுழு கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை- நடிகர் விஷால்
புருஷன் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது நடிகர் விஷாலுக்கு காயம் ஏற்பட்டிருப்பது பற்றி...
படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, நாளை நடைபெறவுள்ள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஷால் வெளியிட்ட அறிக்கை: சுந்தர்.சி இயக்கும் எனது அடுத்த படமான 'புருஷன்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு கோவாவில் நடை பெற்றது. பரபரப்பான சண்டைக் காட்சியின்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு முதுகில் காயமானது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு முழுமையாக குணமடைய மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால், நாளை நடக்க இருக்கும் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் கலத்து கொள்ள முடியாதது மிகவும் வருத்தமளிக்கிறது. நேரில் வந்து கலந்துகொள்ள முடியாததற்கு நான் மனமார வருந்துகிறேன். எனது சூழ்நிலையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
Advertisement
Advertisement
விரைவில் குணமடைந்து, மீண்டும் எனது வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்ப ஆவலுடன் காத்திருக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்து, அக்கறையுடன் விசாரிக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
விஷால் நடிக்கும் ‘புருஷன்’ படத்தினை இயக்குநர் சுந்தர்.சி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை அவ்னி சினிமாக்ஸ், பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கிறது.
விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் வெளியான மதகஜராஜா, ஆம்பள, ஆக்சன் ஆகிய 3 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆக்சன் கலந்த நகைச்சுவைக் கதைக்களத்துடன் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தை ஜூனியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
Actor Vishal has stated that he is unable to attend tomorrow's Actors' Association general council meeting due to an injury sustained during shooting.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.