சிலம்பரசன் ஒரு அதியசப் பிறவி: சந்தானம்
நடிகர் சிலம்பரசன் குறித்து சந்தானம் பேச்சு...
நடிகர் சந்தானம் நடிகர் சிலம்பரசன் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து பின் நாயகனாக கடந்த 12 ஆண்டுகளாக நடித்து வருகிறார். இதில், சில வெற்றிப்படங்களும் அடங்கும்.
தற்போது, நடிகர் சந்தானம் கதாநாயகனாக தன் 20-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை, சுதாமன் கிருஷ்ணா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அதிசயப்பிறவி எனப் பெயரிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட சந்தானத்திடம் உங்களைப் பொறுத்தவரை நடிகர்களில் அதிசயப்பிறவி யார்? எனக் கேட்கப்பட்டது.
இதற்கு சந்தானம், “நடிகர் சிலம்பரசன்தான் அந்த அதிசயப்பிறவி. உடல் தோற்றத்தை அடிக்கடி மாற்றி நடித்து வருகிறார். மாநாடு திரைப்படத்தில் இறப்பது மீண்டு வருவது என உயிர்த்தெழுவார். அதனால், அதிசயப்பிறவி எஸ்டிஆர்” எனத் தெரிவித்துள்ளார்.