ஜெயிலர் 2! சந்தானம் நடித்த காட்சிகள் நீக்கமா? வெளியான கொண்டாட்ட விடியோ
ஜெயிலர் 2 படத்தில் நடிகர் சந்தானம் நடித்தது குறித்து...
ஜெயிலர் 2 படத்தில் நடிகர் சந்தானம் நடித்ததாகவும், அவரின் காட்சிகள் நீக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சமூடு, வித்யாபாலன், சிவராஜ் குமார், மோகன்லால், யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியானது. அக். 15-ல் ஜெயிலர் 2 வெளியானது.
அனிருத் இசையமைத்த இந்தப் படம், வெளியான முதல் 8 நாள்களிலேயே சுமார் ரூ. 600 கோடி வசூலித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
முன்னதாக, இந்தப் படத்தில் நடிகர் சந்தானம் நடித்ததாகவும், படத்தின் நீளம் கருதி அவரின் காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஜெயிலர் 2 படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஒரு கொண்டாட்ட விடியோவும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த விடியோவில் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், எஸ்.ஜே.சூர்யா, வித்யாபாலன் உள்ளிட்டோருடன் சந்தானமும் உடனிருக்கிறார். இதன் மூலம் ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் நடித்ததற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
Actor Santhanam in Jailer 2 shooting spot
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.