முகப்பு

சந்தானத்தின் லவ் பைட் வெளியீட்டுத் தேதி!

லவ் பைட் திரைப்பட வெளியீட்டுத் தேதி...

சந்தானத்தின் லவ் பைட் வெளியீட்டுத் தேதி!
பகிர்:

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான லவ் பைட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து பின் நாயகனாக கடந்த 12 ஆண்டுகளாக நடித்து வருகிறார். இதில், சில வெற்றிப்படங்களும் அடங்கும்.

தற்போது, நடிகர் சந்தானம் கதாநாயகனாக தன் 20-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை, சுதாமன் கிருஷ்ணா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அதிசயப்பிறவி எனப் பெயரிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, ஏஜிஎஸ் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் லவ் பைட் திரைப்படத்திலும் நடித்து முடித்தார். தற்போது, இப்படம் வருகிற டிச. 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

The release date for the film Love bite, starring actor Santhanam, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.