லவ் பைட் திரைப்படத்தின் போஸ்டர்!
லவ் பைட் புதிய போஸ்டர்...
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான லவ் பைட் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து பின் நாயகனாக கடந்த 12 ஆண்டுகளாக நடித்து வருகிறார். இதில், சில வெற்றிப்படங்களும் அடங்கும்.
தற்போது, நடிகர் சந்தானம் கதாநாயகனாக தன் 20-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை, சுதாமன் கிருஷ்ணா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அதிசயப்பிறவி எனப் பெயரிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இதற்கிடையே, ஏஜிஎஸ் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் லவ் பைட் திரைப்படத்திலும் நடித்து முடித்தார். தற்போது, இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இப்படம் டிசம்பர் வெளியீடாகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.