மே 8-ல் நடுநிலை, பிளஸ்1 தேர்வு முடிவுகள்
கடலூர் மாவட்டத்தில் 6, 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் 6, 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே கடலூர் மாவட்டத்தில் 6, 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை கல்வி அதிகாரிகள் எடுத்து உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் அரசு பொதுத் தேர்வுகளைத் தவிர்த்து இதர வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி தேர்வுகள் ஆரம்பித்து, ஏப்ரல் மாதம் 19-ம் தேதியுடன் முடிவடைந்தது. 20-ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.
Advertisement
விடைத்தாள்களைத் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியை விரைவில் முடித்து, மே மாதம் 8-ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணிராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் கடலூர் மாவட்டத்தில் 6, 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகள் எழுதிய மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகள் வரும் 8-ம் தேதி வெளியாகிறது. ஜூன் மாதம் 3-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கின்றன.