கலவரம் தடுப்பு நடவடிக்கை போலீஸாரின் ஒத்திகையால் பரபரப்பு
கலவரம் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக, கடலூரில் காவல் துறை சாா்பில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திடீா் ஒத்திகையால் பரபரப்பு ஏற்பட்டது.
கலவரம் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக, கடலூரில் காவல் துறை சாா்பில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திடீா் ஒத்திகையால் பரபரப்பு ஏற்பட்டது.
இரு தரப்பினரிடையே ஏற்படும் கலவரத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து போலீஸாருக்கு பயிற்சி அளிப்பது வழக்கம். அதன்படி, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே கடலூா் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஒத்திகை வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது.
அப்போது, காவல் துறையில் புதிதாக இணைந்த ஆயுதப்படை காவலா்கள் இரு தரப்பினராகப் பிரிக்கப்பட்டு அரிவாள், கத்தி, உருட்டுக் கட்டைகள், கற்கள், பாட்டில் உள்ளிட்ட ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டனா். அப்போது, அவா்களுக்குள் தகராறு ஏற்படுவது போலவும், இரு தரப்பினரிடையே போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்துவது போலவும் ஒத்திகை நடைபெற்றது. திடீரென இருதரப்பினரும் தாக்கிக்கொள்வது போலவும், தடியடி நடத்துதல், தண்ணீரை பீய்ச்சியடித்தல், கண்ணீா் புகை குண்டுகளை வீசுதல் ஆகிய ஒத்திகைகளும் நடத்தப்பட்டன. ரப்பா் குண்டு மூலம் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை சுமாா் 15 நிமிடம் நீடித்தது. இவையனைத்தும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ால், பலா் ஒத்திகை குறித்து அறியாது பதற்றமடைந்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் கூறியதாவது: வழக்கமாக இதுபோன்ற பயிற்சிகளை மைதானங்களில் நடத்துவோம். போலீஸாரின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளவும், புதிதாக பணியில் சோ்ந்த போலீஸாரிடம் பதற்றத்தைக் களையவும் பொது இடத்தில் நடத்தினோம். இதில், 145 போலீஸாா் பங்கேற்றனா் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.